மண் கடத்தலை கண்டு கொள்ளாத அதிகாரிகள்! Mineral | Salem | Mineral illegal mining
இரவில் நடக்கும் கடத்தல் காணாமல் போகும் மலை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி, கோனேரிப்பட்டி பகுதியில் கோவிந்தராஜ மலை உள்ளது. இதன் அடிவாரத்தில் சில மர்ம ஆசாமிகள் சிலர், பல ஏக்கர் பரப்பளவுக்கு மரங்களை அகற்றி, அனுமதியின்றி குவாரி அமைத்துள்ளனர். அங்கு இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் மூலம் கிராவல் மண் கடத்தல் ஜோராக நடக்கிறது. 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மலையின் அடிவாரத்தையே காலி செய்துள்ளனர். அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன், விஏஓ அலுவலகம் இருந்தும் மண் கடத்தலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படியே போனால் சில ஆண்டுகளில் மலை முழுவதும் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மண் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.