மத்திய அரசு நிதியை ஏப்பம் விட்டுவிட்டு மகேஷ் பேசும் பேச்சு minister anbil mahesh poyyamozhi k.anna
மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என திமுக அரசு கூறுவதால், அதற்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பற்றி பாஜ தரப்பு பேசி வரும் நிலையில், அதற்கெதிரான கருத்துக்களை திமுக தரப்பு முன் வைத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினும், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷும் மும்மொழி கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிடுவதும் பேசுவதுமாக உள்ளனர். அந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும்; மும்மொழி கொள்கை எதிர்ப்புணர்வு மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பது அவர்களது எண்ணமாக உள்ளது. ஆனால், அவர்களின் கருத்துகளுக்கு பதிலடியை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அமைச்சர் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அறிவியல் மொழிதான் எங்களின் மூன்றாவது மொழி! தேசிய கல்விக்கொள்கையை ஆராய்ந்தால் அது NEP 2020 அல்ல RSS 2020 என்பது புரியும். தமிழ்நாட்டின் கல்வி முறைதான் இந்திய கல்வி முறைக்கே தாயாக உள்ளது! எங்களின் மூன்றாவது மொழி C, C++, Jawa, AI போன்ற அறிவியல் மொழிகள்தான் என மகேஷ் பதிவிட்டிருந்தார்.