/ தினமலர் டிவி
/ பொது
/ அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என வாக்குவாதம் | minister durai murugan | DMK | vellore
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என வாக்குவாதம் | minister durai murugan | DMK | vellore
வேலூர் சேண்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேயர் சுஜாதா ஆய்வு செய்ய வந்தனர். அப்போது முள்ளிப்பாளையம் பகுதி மக்கள் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் செய்யவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் சுப்பு லெட்சுமி தானே நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போதும் மக்கள் பல கேள்விகளை எழுப்பினர். சொந்த தொகுதி மக்களே அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
செப் 11, 2025