ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை MEA| Ministery of Extranal affairs
பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத சோதனை தீவிரமாக நடத்தி வருவதால், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் என்று சமீபத்தில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இது பற்றி கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், அதிபர் டிரம்ப்பின் கருத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்றார். பாகிஸ்தான் ரகசிய மற்றும் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்ட வரலாற்றை கொண்டுள்ளது. பல சதாப்தங்களாக கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாடு மீறுதல், ரகசிய கூட்டணி உள்ளிட்டவற்றின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இந்த நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச சமூகத்திடம் பலமுறை இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்க மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது. குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்பது பற்றி ரந்தீர் கூறும்போது, ரஷ்ய ராணுவத்தில் கிட்டத்தட்ட 44 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை மீட்பது; இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா பேசி வருவதாக கூறினார். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளை இந்தியர்கள் ஏற்காமல் விலகி இருக்க வேண்டும்; ஏனென்றால் அது உயிருக்கு ஆபத்தானது என்று மத்திய வெளியுறவு அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். #IllegalNuclearActivities #PakistanHistory #MEA #TrumpsClaim #NuclearPolicy #InternationalRelations #NuclearSecurity #Geopolitics #Pakistan #MiddleEast #Diplomacy #PoliticalAnalysis #GlobalAffairs #SecurityConcerns #NuclearProgram #CurrentEvents #InternationalLaw #DefensePolicy #ForeignPolicy #ConflictResolution