கோவையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்! Minor girl | Sexual Assault |
கோவையில் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பார்க்கில் 16 வயது சிறுமி, தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அங்கு சென்ற 7 பேர் கும்பல் சிறுமியையும், அவரது நண்பரையும் தாக்கினர். பின்னர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன், கார்த்திக், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன், ஆட்டோ மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு கூறினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 7 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதால் கோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.