பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு Missile |drones |attack| Ind vs Pak |
பாகிஸ்தான் வான் வெளியை மூடாமல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இந்திய விமான படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறினார். 7ம் தேதி இரவு 8.30க்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிகளை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல் தோல்வி அடைந்த போதும் பாகிஸ்தான் தனது பகுதியில் பயணிகள் விமானம் பறக்கும் வான் வெளியை மூடவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்பது தெரியும். அது முழுமையாக தெரிந்துதான் பயணிகள் விமானத்தை அது கேடயமாக பயன்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லை பகுதியில் சர்வதேச விமானங்கள் பறந்தது பாதுகாப்பானது இல்லை. இந்தியா தனது வான் வெளி பகுதியை மூடுவதாக அறிவித்து இருந்தது. அதனால் இந்திய பகுதி வான்வெளியில் சிவில் விமான போக்குவரத்து நடக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் வான்வெளி மூடப்படாததால் கராச்சி மற்றும் லாகூர் இடையிலான விமான பாதையில் பயணிகள் விமானங்கள் பறந்தன. இந்திய விமானப்படை நிதானம் காட்டியதால் சர்வதேச பயணிகள் விமானங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.