பயங்கரவாதிகளை நிலைகுலைய வைக்கும் இந்தியா | Mk-II(A) DEW | Drone Punjab
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு இரவு நேரத்தில் ட்ரோன்கள் மூலமாக வான்வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு வீசப்படுகின்றன. இந்த பொருட்கள் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன்களை முறியடிப்போம் என பஞ்சாப் அரசு கூறியிருந்தது. தற்போது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வருவதை தடுக்க, எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது.
ஏப் 30, 2025