/ தினமலர் டிவி
/ பொது
/ சென்டிமென்ட்டால் ரத்தானது ஸ்டாலினின் புதுகை விசிட் | MKstalin | DMK | Pudukottai | Duraga Stalin
சென்டிமென்ட்டால் ரத்தானது ஸ்டாலினின் புதுகை விசிட் | MKstalin | DMK | Pudukottai | Duraga Stalin
புதுக்கோட்டையில் நேற்று சட்ட அமைச்சர் ரகுபதியின் பேரன் திருமணம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்க இருந்தார். மாலை திருச்சி ஏர்போர்ட் வரும் ஸ்டாலின், சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்ல திட்டமிட்டு இருந்தார்.ஆனால் திடீரென அவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. முன்னதாக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வர பென்ஸ் கார் ஒன்று திருச்சி ஏர்போர்ட் சென்றது. துர்கா ஸ்டாலினை ஏற்றுவதற்காக சென்ற அந்த கார் திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே ஆட்டோ, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் வந்தவர், ஆட்டோ டிரைவர் என 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஜூலை 08, 2024