ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து | Exchanged MoUs Eaton for a ₹200 crore
தமிழகத்திற்கு ₹200 கோடி சிகாகோவில் முடிந்த டீல்! 500 பேருக்கு வேலை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வரும் முயற்சியசாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். சிகாகோவில் ஈட்டன் மற்றும் அஷ்யூரண்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாகத்திற்காக ஈட்டன் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் 200 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஈட்டன் நிறுவனம், டேட்டா சென்டர், தொழில்துறை, வணிகள், குடியிருப்பு, விண்வெளி மற்றும் உற்பத்தி பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனம். இந்நிறுவனம் 35 நாடுகளில் 208 மையங்களை கொண்டுள்ளது. அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், பேரிடர் மேலாண்மை மற்றும் சந்தை இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகிறது. breath முன்னதாக, சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர் மாநாட்டில் 900 கோடி முதலீட்டில் 4100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.