ஸ்டாலின் முன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நிர்வாகிகள்! MK Stalin | DMK Meeting | Arivalayam | Chennai
சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை முடுக்கி விடும் விதமாக, தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 36 பேர் பேசினர். அதில் சிலர் வைத்த குற்றச்சாட்டுகள், முதல்வர் ஸ்டாலினை அதிர வைத்தன. குத்தாலம் கல்யாணம் பேசியதாவது: கட்சியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்; அவர்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை. பெரும்பாலான தொகுதிகள், கூட்டணி கட்சியினருக்கு வழங்கப்பட்டு விடுகின்றன. கூட்டணி தர்மம் காக்கிறோம் என்ற பெயரில், அவர்கள் அதிக எண்ணிக்கையில் சீட் கேட்கின்றனர்; வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல், சீட்களை பெற்று விடுகின்றனர். சீட் பெற்ற பின்னரே, வேட்பாளர்களை தேடுகின்றனர்.