உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்த பட்ஜெட் M.K. Stalin | CM Tamil Nadu |2025-26 Budget

எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்த பட்ஜெட் M.K. Stalin | CM Tamil Nadu |2025-26 Budget

சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார். மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், விமான நிலையம், நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீன தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்களாக அனைவருக்குமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லோர்க்கும் எல்லாம் எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை