சபாநாயகரிடம் 2 பிரிவாக முட்டி மோதிய பாமக எம்எல்ஏக்கள் pmk| ramadoss| anbumani| mla arul
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகாரப்போட்டி உச்சத்தில் இருக்கிறது. நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவதிலும் இருவருக்குள் அதிகார சண்டை நடக்கிறது. ராமதாஸின் ஆதரவாளரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அன்புமணிக்கு எதிராக பேசி வந்த நிலையில், அவரை கட்சியை விட்டே தூக்கினார் அன்புமணி. எம்எல்ஏவை நீக்கும் அதிகாரம் அன்பு மணிக்கு இல்லை தமக்கு மட்டுமே இருப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார். இதுவரை கட்சிக்குள் மட்டும் இருந்த அப்பா -மகன் மோதல் தற்போது சட்டசபை வரை சென்றுள்ளது. எம்எல்ஏ அருள், பாமக சட்டசபை கொறடாவாகவும் இருக்கிறார். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அவரை, கொறடா பதவியில் இருந்து நீக்க கோரி, அன்புமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர், சட்டசபை செயலாளர், சபாநாயகர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.