மகாராஷ்டிராவில் நடு ரோட்டில் சம்பவம் செய்த MNS நிர்வாகி மகன் MNS|Raj Thackrey | Mumbai
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியின் மாநில துணை தலைவர் ஜாவெட் ஷேக். இவரது மகன் ராஹில், மும்பை அந்தேரியில் நேற்றிரவு காரில் சென்றபோது முன்னாள் சென்ற பெண்ணின் கார் மீது மோதினார். அந்த பெண் நியாயம் கேட்ட போது, ராஹில் அவரை ஆபாசமாக திட்டினார். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிந்தது. மகாராஷ்டிராவில் இருக்கும் மக்கள் இதைத்தான் பேச வேண்டும், இப்படித் தான் இருக்க வேண்டும் என பாடம் நடத்தும் நீங்கள் மதுபோதையில் கார் ஓட்டி வருவது நியாயமா? என அந்த பெண் கேட்டுள்ளார். இதனால் மீண்டும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய ராஹில், வேண்டுமானால் பணம் வாங்கிச் செல் என்றார். பணம் வாங்க மறுத்த பெண் போலீசில் புகார் அளிப்பதாக கூறினார். உடனே அக்கா என்னை மன்னியுங்கள் எனக்கூறிய ராஹில், சற்று நேரத்தில் மீண்டும் மது போதையில், உன்னால் முடிந்ததை செய். என் அப்பா யார் எனத் தெரியுமா? அவர் எம்என்எஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர். எங்கு வேண்டுமானாலும் போய் கம்ப்ளைன்ட் கொடு என்றார்.