உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா - பிரேசில் வர்த்தம், உறவு மேம்பாடு பற்றி லுாலா - மோடி பேச்சு Modi - Lula meeting at

இந்தியா - பிரேசில் வர்த்தம், உறவு மேம்பாடு பற்றி லுாலா - மோடி பேச்சு Modi - Lula meeting at

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லுாயிஸ் லுாலாவுக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரேசில் அதிபரை வரவேற்றார். பின், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்ற லுாலா, அங்கிருந்து ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஐதராபாத் இல்லத்தில், பிரேசில் அதிபர் லுாலாவை வரவேற்ற பிரதமர் மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து அவருடன் கலந்துரையாடினார். பின், இரு நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் குழுவின் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இந்தியா - பிரேசில் இடையிலான உறவை மேம்படுத்தவது, வர்த்தகத்தை விரிவடையச் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. #Modi| Modi-LulaMeet| India-Brazil| PMModi| Delhi| AISummit|

பிப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !