ஒருங்கிணைந்த முன்னேற்றம் காண உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு Modi | Brics Summit 2024| India on Brics
ரஷ்யாவில் 16வது பிரிக்ஸ் மாநாடு அந்நாட்டு அதிபர் புடின் தலைமையில் கஜான் நகரில் நடக்கிறது. இதில், இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: 16வது பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் ரஷ்ய அதிபர் புடினுக்கும், உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள். உலக நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள இந்த தருணத்தில் நாம் ஒன்று கூடியுள்ளோம். வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என்ற பிரிவினைவாத பேச்சு எழுந்துள்ளது. தொழில்நுட்படம் வளர்ந்துள்ள அதே நேரத்தில் சைபர் செக்யூரிட்டியில் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. டீப் பேக் வீடியோக்கள், தவறான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.