உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அர்ஜென்டினாவில் பிரதமர் மோடி; பாரத் மாதா கி முழங்கிய இந்தியர்கள் Modi at Argentina | Modi tour on

அர்ஜென்டினாவில் பிரதமர் மோடி; பாரத் மாதா கி முழங்கிய இந்தியர்கள் Modi at Argentina | Modi tour on

அரசு முறை பயணமாக தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் பியூனஸ் அயர்ஸ் Buenos Aires விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அர்ஜென்டினா அரசின் சார்பில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்தார். Buenos Aires நகரில் குழுமியிருந்த அர்ஜென்டினா வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். பலர் மோடிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும், மோடியிடம் ஆட்டோகிராப் பெற்றும் மகிழ்ந்தனர். பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என பலவாறு கோஷங்கள் எழுப்பி அங்குள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை வரவேற்றனர். இந்தியர்களின் வரவேற்பால் பிரதமர் மோடி நெகிழ்ந்து போனார். தொலைவு ஒரு விஷயம் அல்ல; பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும், இந்தியர் என்ற உணர்வு நம் மக்கள் மனங்களில் பிரகாசித்ததை காண முடிந்தது. அர்ஜென்டினாவில் இந்தியர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை Javier Milei சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இருவரும் இந்தியா - அர்ஜென்டினாவின் உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளோம் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். லித்தியம், காப்பர், இயற்கை எரிவாயு என பல வகை கனிம வளங்கள், எரிசக்திக்கு தேவையான வளங்கள் நிறைந்த அர்ஜென்டினாவுடனான உறவை மேம்படுத்துவதற்காக மோடி எடுக்கும் முயற்சிகள், இந்தியாவின் எதிர்கால எரிசக்தி துறை வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கும் என வல்லுனர்கள் கூறுகி்னறனர். குளோபல் சவுத் நாடுகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அந்நாடுகளை ஒருங்கிணைக்க பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகள் இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ