சிந்தூர் கொடுத்த அவமானம்: பாகிஸ்தான் என்றும் மறக்காது: மோடி|Modi at Jammu Kashmir| Rail Bridge
ஜம்மு - காஷ்மீருக்கு சென்ற பிரதமர் மோடி, உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார், 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் உட்பட 46,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். கட்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையில் இன்று ஒரு முக்கியமான நாள். இந்த மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய நாள். மாதா வைஷ்ணோதேவியின் அருளால், இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது. உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் வழித்தடம் ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியின் அடையாளம். பாரதத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வெற்றிக் கொண்டாட்டம். செனாப் ரயில் பால திட்டத்திற்காக ஜம்மு - காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தான் 7 - 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இத்திட்டத்திற்காக காத்திருந்ததாக கூறினார்.