உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர்போர்ட்டுக்கே வந்து மோடியை வரவேற்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர்

ஏர்போர்ட்டுக்கே வந்து மோடியை வரவேற்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர்

ModiatNewzeland #PMModi #NewzelandTour #NarendraModi #IndiaPMatNewzeland அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து, நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து ஏர்போட்டில் இறங்கிய பிரதமர் மோடியை, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கட்டி அணைத்து வரவேற்றார். ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிகாரிகள், முக்கிய தலைவர்களை லக்சன் அறிமுகம் செய்து வைத்தார். நியூசிலாந்து வந்த பிரதமர் மோடியை, அங்கு வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ந்த மோடி, இந்தியர்களின் வரவேற்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நியூசிலாந்தில் சிறப்பான வரவேற்பு அளித்த பிதரமர் லக்சனுக்கு நன்றி. 40 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம், இரு நாட்டு உறவு மேம்படும் என நம்புகிறேன். இங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாய்லாந்து, ஆஸ்திரேலியாவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணத்திலும் இந்தியா - நியூசிலாந்து இடையே முக்கியத்துவம் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ