உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்: மோடி உரை

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்: மோடி உரை

கானா, டிரினிடாட்-டொபாகோ , அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி, 1 வாரகாலம் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கானா நாட்டு பயணத்தை முடித்து விட்டு இன்று கரீபியன் தீவு நாடான டிரினிடாட்-டொபாகோ குடியரசு நாட்டுக்கு சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசர், வாழை இலையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். இலையில் பரிமாறுவது, டிரினிடாட்-டொபாகோ மக்களுக்கு குறிப்பாக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் இலையில் உணவு பரிமாறப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார். டிரினிடாட்-டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்துக்கு, அயோத்தி ராமர் கோயில் மாதிரி, சரயு நதி புனித நீர் மற்றும் கும்பமேளா புனித நீர் ஆகியவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த பரிசுகள் இரு நாடுகள் இடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக பிணைப்புகளை அடையாளப்படுத்துகிறது என மோடி தெரிவித்துள்ளார்.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி