SPG-க்கு மோடி இன்ப அதிர்ச்சி... அப்படி என்ன செய்தார்? Modi feast | Modi viral video | Election 2026
பிரதமர் மோடிக்கு SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கிறது. பொதுவாக, டில்லிக்கு வெளியே பிரதமர் தங்கும் போது பாதுகாப்பு அளிப்பது சவாலானது. அதுவும், தேர்தல் நேரத்தில் ரோடு ஷோ நடத்தும்போதெல்லாம், எஸ்பிஜியின் பாடு திண்டாட்டம் தான். அதிலும் தொடர் பிரசாரம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படியொரு சூழலில் தான் பிரதமர் மோடி செய்த ஒரு காரியம் டில்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமருக்கு பாராட்டும் குவிகிறது. மேற்கு வங்க தேர்தலில் கடைசி நாள் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, சிக்கிமில் இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அங்கிருந்து தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றார். ஏப்ரல் 29ல் மீண்டும் டில்லி திரும்பினார். 4 நாட்கள் டில்லிக்கு வெளியே தங்கிய பிரதமர் மோடி, போன இடத்தில் எல்லாம் ரோடு ஷோ நடத்தினார். இந்த 4 நாட்களிலும் SPG வேலை மிகவும் கடினமாக இருந்தது பாதுகாப்பு வீரர்கள் கஷ்டத்தை உணர்ந்த பிரதமர் மோடி அவர்களை உற்சாகப்படுத்த விரும்பினார். #SPG #PMmodi #election2026 #electioncampaign #Roadshow #westbengal #sikkim #Varanasi #Bjp #Delhi