உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீவிர விசுவாசியின் அன்புக்கு பிரதமர் மோடி செய்த கைம்மாறு! pm modi| modi helps admirer put shoes

தீவிர விசுவாசியின் அன்புக்கு பிரதமர் மோடி செய்த கைம்மாறு! pm modi| modi helps admirer put shoes

ஹரியானாவை சேர்ந்தவர் ராம்பால் காஷ்யப். பாஜ தொண்டரான இவர், 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சபதம் எடுத்தார். குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் ஆக வேண்டும்; அதுவரை காலணி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்தார். மோடி பிரதமர் ஆகி, அவரை நேரில் சந்தித்த பின்புதான் காலணி அணிவேன் என உறுதியாக இருந்தார். கடந்த 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்தார். இந்நிலையில், ஹரியானாவின் யமுனா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டனர். அப்போது, தீவிர விசுவாசி ராம்பால் காஷ்யப்பின் சபதம் பற்றி பிரதமர் மோடிக்கு தெரியவந்தது. பிரதமரை காஷ்யப் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. காஷ்யப்பை வரவேற்று சோபாவில் உட்கார வைத்த மோடி, நீங்க ஏன் எப்படி செய்தீர்கள்; ஏன் உங்களை நீங்களே வருத்தி கொண்டீர்கள்? என அன்பாக கேட்டார். நீங்க பிரதமர் ஆவதற்காக 14 ஆண்டுகளாக வெறுங்காலில் நடக்கிறேன் என்றார் காஷ்யப். இன்னைக்கு உங்களை ஷூ அணிய சொல்லப்போகிறேன்; இனிமே எதிர்காலத்தில் இப்படி செய்யக்கூடாது எனக்கூறிய மோடி ஒரு ஜோடி ஷூவை அவருக்கு பரிசளித்து அதை அணிய செய்தார். அத்துடன், காஷ்யப்பின் பாதத்தை தொட்டு ஷூ அணியவும் மோடி உதவினார். புது ஷூ அணிய வசதியாக இருக்கிறதா? எனக் மோடி கேட்க, சரியாக இருக்கிறது என்றார் காஷ்யப். அவரது தோளில் தட்டிக்கொடுத்த மோடி, இனிமேல் தொடர்ந்து காலணி அணிய வேண்டும் என்று அவருக்கு அன்பு கட்டளையிட்டார். காஷ்யப் உடனான சந்திப்பு பற்றி எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார் அதில், யமுனாநகர் பொதுக் கூட்டத்தின்போது, கைதலை சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை சந்தித்தேன். நான் பிரதமர் ஆன பிறகு என்னை சந்தித்த பின்பே காலணி அணிவதாக சபதம் எடுத்தார். ராம்பால் போன்றவர்களால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன். அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற சபதங்கள் எடுக்கும் அனைவரையும் ஒன்று கேட்டுக்கொள்கிறேன்; உங்கள் அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். தயவு செய்து சமூக பணி மற்றும் தேச கட்டமைப்பது தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !