கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் மத்திய அரசு | Modi | Kerala | Wayanad
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்துக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்தார். ராணுவத்தால் அமைக்கப்பட்ட பாலத்தின் மீது நடந்து சென்று சேதங்களை பார்த்தார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளி முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பிரதமர் மோடி கண்கலங்கி நின்ற மக்களின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார். அவர்களது கோரிக்கைகளை கேட்ட பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கேரள முதலவர் பிரனராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உடன் இருந்தனர்.
ஆக 10, 2024