சேவா தீர்த் திறப்பில் ராமர் பாசத்தை காட்டிய மோடி Modi sentiment | seva teerth | lord ram sentiment
டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்து பணியை துவங்கினார் பிரதமர் மோடி. இத்துடன் கர்த்தவ்ய பவன் 1, 2 ஆகிய அரசு அலுவலக கட்டடங்களையும் திறந்து வைத்தார். சேவா தீர்த் எனப்படும் பிரதமர் அலுவலகம், 13ம் தேதி திறக்கப்பட்டதற்கு பாஜவில் ஒரு சுவாரஸ்யமான தகவல் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் விஜய ஏகாதசி. அதிலென்ன விசேஷம்? என்றால், பகவான் ராமருடன் இந்த விஜய ஏகாதசி தொடர்பு உடையது. இந்த நாளில் தான் ராமர் விரதம் இருந்து இலங்கையில் இருந்து சீதையை மீட்க கடலை தாண்டினார். இதனால் தான் இந்த நாளை தேர்ந்தெடுத்தாராம் மோடி. 2047ல் விக்சித் பாரத் என்ற தன் கனவு திட்டம் நிறைவேறி, பாரதம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பதால் தான், விஜய ஏகாதசி அன்று திறந்து வைத்தார் என்கின்றனர். #ModiSentiment #SevaTeerth #LordRamSentiment #IndianPolitics #DevotionalContent #SocialService #CulturalAwareness #ReligiousHarmony #HinduBeliefs #FaithAndDevotion #CommunityService #InspiringLeaders #IndianCulture #SpiritualJourney #UnityInDiversity #SevaAboveSelf #RamBhakts #PositiveVibes #EmpowermentThroughSeva