உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிராவில் காங்கிரசை வெளுத்தார் மோடி Modi Speech at Chandrapur| Maharashtra election | MVA| Ma

மகாராஷ்டிராவில் காங்கிரசை வெளுத்தார் மோடி Modi Speech at Chandrapur| Maharashtra election | MVA| Ma

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணியும் தேர்தலில் நேருக்கு நேர் களம் காண்கின்றன. மாநிலம் முழுதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சந்திரபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் அக்கறை இருந்தது இல்லை. குறிப்பாக பழங்குடியினர் நலனில் அந்த கட்சி எவ்வித அக்கறையும் காட்டியது இல்லை. பழங்குடியினர் இடையே ஜாதி மோதலை துாண்டிவிட்டு, அவர்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எஸ்டி என்ற ஒற்றை அடையாளத்துடன் செயல்பட்டால், மிகப்பெரிய பலம் பொருந்தியவர்களாக இருப்பர். ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதை விரும்பவில்லை.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி