உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரை Modi Speech 75th anniversary of Constitution

அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரை Modi Speech 75th anniversary of Constitution

நாட்டின் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவதை ஒட்டி, லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்தது. இதில் பிரதமர் மோடி உரையாற்றினார். அரசியல் சாசனத்தை வகுத்தளித்த நம் முன்னோர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள். இதே அரசியல் சாசனம் தான் நம் அனைவரையும் இங்கு அழைத்து வந்துள்ளது. நாம் கடந்து வந்த 75 ஆண்டுகள் மறக்க முடியாத நினைவுகளை கொண்டுள்ளன. நம் நாட்டின் அரசியல் சாசனம் மிகச் சிறந்தது. நம் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் இந்தியா. பிற நாடுகளை ஒப்பிடுகையில் மகளிருக்கு ஆரம்பத்திலேயே ஓட்டுரிமை வழங்கியது நம் அரசியல் சாசனம் தான். பழங்குடியினத்தை சேர்ந்த பெண் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதே, அரசியல் சாசனம் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு தலை சிறந்த உதாரணம். அரசியல் சாசனம் வழங்கிய அதிகாரத்தால், இந்த அரசு எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதே அரசியல் சாசனத்தை ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட குடும்பம் பல ஆண்டுகளாக மிக தவறாக கையாண்டது.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி