திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மூழ்கடிக்கிறது Modi Speech on delhi election victory| Modi
டில்லி சட்டசபை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் வெற்றி கொண்டாடட்டம் பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 10 ஆண்டுகளாக மிகப் பெரிய இடர்பாடில் சிக்கியிருந்த டில்லி தற்போது தப்பியுள்ளது. இனி, டபுள் இன்ஜின் ஆட்சியில் டில்லி இரட்டை வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும். 2014 முதல் தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்களிலும், டில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜ வெற்றி பெற்றது. டில்லி மக்களுக்கு இன்னும் சேவை செய்ய வசதியாக தற்போது சட்டசபை தேர்தலிலும் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், டில்லியில் நடந்த மூன்று லோக்சபா, மூன்று சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த கட்சி டபுள் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. இப்போது இருக்கும் காங்கிரசார் அர்பன் நக்சல் மொழியில் பேசுகின்றனர். நாட்டிற்கு எதிராக, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் பேசுகின்றனர். இண்டி கூட்டணி காங்கிரசின் உண்மை முகத்தை புரிந்து கொண்டுள்ளது. உபியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை காங்கிரஸ் பலவீனப்படுத்தியுள்ளது. பீகாரில் ஆர்ஜேடியையும், தமிழகத்தில் திமுகவையும் நம்பி அரசியல் செய்யும் காங்கிரஸ், தானும் மூழ்கி, தன்னை சார்ந்தவர்களையும் மூழ்கடித்துக் கொண்டு உள்ளது. இதை உணர்ந்த இண்டி கூட்டணி கட்சிகள், டில்லி தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக ஒன்று திரண்டன. அப்படியும் காங்கிரஸ் வீழ்ந்ததே தவிர, பாஜவின் வெற்றியை தடுக்க முடியவில்லை.