உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொழிகள் இடையே எப்போதும் பகை உணர்வு இல்லை: மோடி Modi Speech on Marathi Bhasha Summit| Modi on Indi

மொழிகள் இடையே எப்போதும் பகை உணர்வு இல்லை: மோடி Modi Speech on Marathi Bhasha Summit| Modi on Indi

அலகி பாரதிய மராத்தி இலக்கிய மாநாடு டில்லியில் நடந்தது. இதில், மகாராரஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முன்னாள் முதல்வர் சரத் பவார், மராத்தி இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய மொழிகள் மற்றும் அதன் தனித்துவம், பெருமைகளை விளக்கினார். இந்திய மொழிகளுக்கு இடையே எப்போதும் விரோத போக்கு, வெறுப்புணர்வு இருந்ததில்லை. அவை ஒன்றையொன்று அரவணைத்தும், ஒன்று மற்றொன்றின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளன. மொழிகளின் பெயரில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி நடக்கும் போதெல்லாம், தொண்மை வாய்ந்த நம் மொழிகளின் பாரம்பரியமே அதற்கு சரியான பதில் அளிக்கின்றன. அதுபோன்ற மாயைகளில் இருந்து விலகி நின்று, மொழிகளை வளர்ப்பதும், அவற்றை தன்னகப்படுத்தி கொள்வதும் நம் அனைவரின் சமூக கடமை. எனவே தான் நாட்டின் அனைத்து மொழிகளையும் நாம் முதன்மை மொழிகளாக கருதுகிறோம். எனவே தான் மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கி வருகிறோம் என பிரதமர் மோடி பேசினார்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை