உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்சிகளை பந்தாட அரசு டிவி மூலம் மோடி அஸ்திரம் | Modi | Doordarshan | Sudhir Chaudhary | Tasmac scam

கட்சிகளை பந்தாட அரசு டிவி மூலம் மோடி அஸ்திரம் | Modi | Doordarshan | Sudhir Chaudhary | Tasmac scam

பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஒரு விஷயம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மத்திய அரசு செய்யும் பல நல்ல விஷயங்கள், மக்களுக்கு உதவும் திட்டங்கள் ஆகியவற்றை, மக்களுக்கு மீடியா சரியாக எடுத்துச் செல்வதில்லை என்பது அவரது குறை. இதனால் தூர்தர்ஷனில் செய்தி துறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடிவெடுத்து, சுதிர் சவுத்ரி என்பவரை செய்தி துறைக்கு தலைவராக நியமித்தார். இவர் பிரபல ஹிந்தி சேனலான ஆஜ்தக்கில் வேலை பார்த்தவர். சுதிர், துார்தர்ஷனில் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், துார்தர்ஷனின் தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மாநில மொழி செய்திகளிலும் பெரும் மாற்றம் வர போகிறதாம். மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், திட்டங்கள், அவர்களது ஆலோசனைகள், மோடி அரசின் திட்டங்கள் மக்களுக்கு எப்படி உதவுகின்றன என்று அரசு சார்பான பல செய்திகளை சுவாரஸ்யமாக தர சுதிர் திட்டமிட்டுள்ளார். இதைத் தவிர, தனியாக ஒரு நிகழ்ச்சியும் தயாரிக்க உள்ளாராம். டாஸ்மாக் ஊழல் உட்பட எதிர்க்கட்சிகளின் ஊழல் பட்டியல், அது தொடர்பான செய்திகள், விவாதம் என தூர்தர்ஷன் இனி டல் அடிக்காமல் பரபரப்பாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடாக செயல்படப் போகிறதாம். அடுத்த மூன்று மாதங்களில் இந்த மாறுதல்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, தூர்தர்ஷனை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் முதல் படியா இது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை