உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைப்ரஸ் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு Modi at Cyprus | Modi Tours on Cyprus| Modi EU

சைப்ரஸ் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு Modi at Cyprus | Modi Tours on Cyprus| Modi EU

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸுக்கு சென்ற நமது பிரதமர் மோடி சென்றுள்ளார். லார்னாகா ஏர்போர்ட்டில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ், அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சைப்ரஸில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். 1962 முதல் இந்தியா சைப்ரஸ் நாடுகள் இடையிலான தூதரக உறவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் நம் நிலைப்பாட்டை சைப்ரஸ் அரசு ஆதரித்து வந்துள்ளது. ஐநாவில் இந்தியா முன்வைக்கும் முக்கிய பிரச்னைகள், முன்மொழியும் கருத்துக்களுக்கு சைப்ரஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. சைப்ரஸ் நாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இந்தியர்கள் வசிக்கின்றனர் என்றாலும், அந்நாட்டின் கல்வி, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. மோடியின் சைப்ரஸ் பயணத்தின் போது இரு நாடுகள் இடையே, தொழில், வர்த்தகம், முதலீடு, ஐடி, புதிய கண்டுபிடிப்புகள், கடல் வழி போக்குவரத்து, வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மனித வளம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !