பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் பீகாருக்கு அள்ளித்தரும் பிரதமர் மோடி Modi|Patna Airport|Nitish Kumar
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு பாஜ - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். வரும் தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் அந்த கூட்டணி தீவிரமாக உள்ளது. நடப்பு பட்ஜெட்டில் பீகாருக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, எல்லா திட்டங்களையும் வேகமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னா ஏர்போர்ட்டில் ரூ1,200 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம், பாட்னா சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் திறனை பெறுகிறது. நவீன அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.