பாவம் செய்த காங்கிரசுக்கு ஆட்சி ஒரு கேடா? மோடி கேள்வி Congress| BJP| Haryana election| Modi|
அரியானாவில் வரும் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 90 தாெகுதிகளில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று பல்வாலில் நடந்த பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். காங்கிரசுக்கும் தேச பக்திக்கும் சம்பந்தம் இல்லை. ஜாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் சக்தியாகவே காங்கிரஸ் இயங்கி வருகிறது. மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு பதில், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விடாமல் தடுத்தனர். ஜம்மு - காஷ்மீரில் நம் அரசியல் சாசனத்தை அமல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டனர். பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் பெண்களின் வாழ்வை சீரழித்த முத்தலாக்கை ஒழிக்க பாஜ எடுத்த நடவடிக்கையை எதிர்த்தனர். இப்படி எராளமான பாவங்களை செய்த பிறகும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் கனவில் மிதக்கின்றனர். வேலை செய்யாதே; வேலை செய்ய விடாதே என்பதே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரமாக உள்ளது. பாஜவினர் கடுமையாக உழைக்கின்றனர், அதற்கான பலனை பெறுகின்றனர். காங்கிரசார் உழைக்காமல் பலனை எதிர்பார்க்கின்றனர்.