உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடான் திட்டத்தால் உயர பறக்கும் சாமானியர் Asia - Pacific Conference on Civil Aviation| Modi

உடான் திட்டத்தால் உயர பறக்கும் சாமானியர் Asia - Pacific Conference on Civil Aviation| Modi

சிவில் விமான போக்குவரத்து குறித்த ஆசிய - பசிபிக் அமைச்சரவை மாநாடு டில்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இதில் 29 நாடுகள், 8 சர்வதேச நிறுவனங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆசிய - பசிபிக் நாடுகளில் சிவில் விமான போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் விமானப் போக்குவரத்து திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கினார். இந்தியாவில் 15 சதவீத பைலட்கள் பெண்கள். உலக சராசரியே 5 சதவீதம் தான் எனும் நிலையில், விமானப் போக்குவரத்தில் இந்தியா பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. விமானப் பயணம் என்பது குறிப்பிட்ட சிலருக்கானதாக மட்டும் இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது, அது அனைவருக்குமானதாக மாறியுள்ளது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் உடான் திட்டத்தால், சிறு நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே விமானப் பயணம் சாத்தியமானதாக இருந்தது. உடான் திட்டத்தால் லோயர் மிடில் கிளாஸ் மக்களும் விமானத்தில் பறக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.40 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பல லட்சம் பேர் முதல் முறையாக விமானத்தில் பயணித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஆசிய - பசிபிக் நாடுகளில் உள்ள புத்த மதம் சார்ந்த புனித தலங்களை விமான போக்குவரத்து மூலம் இணைப்பதால் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். பொருளாதாரம் வளரும், விமான போக்குவரத்து துறையும் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி கூறினார்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ