பதற வைக்கும் திமுக புள்ளியின் மோசடி பின்னணி | Money fraud | Iridium | DMK party man | Madurai
இதுதான் ஒரிஜினல் சதுரங்க வேட்டை! மெகா மோசடி அம்பலம் சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும் என மதுரை வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி - திமுக நிர்வாகி, பெண் சிலம்பம் மாஸ்டர் மீது வழக்குப்பதிவு மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணிடம் சிலம்பம், யோகா பயிற்சிக்கு சென்று வந்ததால் நன்கு அறிமுகம் ஆகி இருந்தார். தெய்வேந்திரனுக்கு தன் மீது இருந்த நம்பிக்கையை பயன்படுத்தி புதிய தொழிலில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டி உள்ளார். அப்போது தான் சென்னை ஈக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரபியை பற்றி கூறியுள்ளார். முகமது ரபி, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் கலசத்தை வெளிநாட்டில் விற்பனை செய்திருப்பதாகவும், அதற்கான பணத்தை இந்தியாவில் பெற அதிக செலவு செய்கிறார். அவரிடம் லட்சத்தில் முதலீடு செய்தால் கோடியில் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளார் கலைசெல்வி. முதலில் இதை நம்பாத தெய்வேந்திரன் பிறகு எப்படி நம்பினார், என்ன நடந்தது என்பது பற்றி அவர் சொல்லும் விஷயங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது..