அம்மாவை தீர்த்துக்கட்டி அப்பா நாடகம்: தண்டித்த மகள் Mother attacked by Father four-year-old girl sta
பெண் குழந்தையா? என வெறுத்து ஒதுக்கிய அப்பாவை 4 வயது மகளே போலீசில் மாட்டி விட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி Kotwali நகரை சேர்ந்தவர் சந்தீப் புதோலியா. Sandeep Budholia. மெடிக்கல் ரெப்பாக உள்ளார். இவருக்கும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சோனாலிக்கும் 2019ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ரூ.20 லட்சம் சீர் செய்து, சோனாலியின் திருமணத்தை அவர் அப்பா சிறப்பாக செய்து முடித்தார். ஆனால், திருமணம் முடிந்த ஒரிரு நாளிலேயே கார் கேட்டு சந்தீப் நச்சரித்தார். எங்களுக்கு அவ்ளோ வசதி இல்லீங்க என சோனாலியின் அப்பா சொன்னார். இதனால் சோனாலியை சந்தீப்பும் அவர் அம்மாவும் கொடுமைப்படுத்த துவங்கினர். கார் வாங்கிக் கொடுத்தா தான் இந்த வீட்டில் வாழ முடியும் என கூறியதால் சோனாலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்தனர். இரு தரப்பையும் அழைத்துபேசி சமாதானம் செய்தனர். மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். 2020ல் சோனாலிக்கு குழந்தை பிறந்தது. என்ன குழந்தை என சந்தீப் போனில் கேட்டார். பெண் குழந்தை என்றதும் துண்டித்து விட்டார். ஆஸ்பிடலுக்கு வரவே இல்லை. சோனாலி நொறுங்கிப்போனார். வேறு வழியின்றி சோனாலியை அவரது அப்பா டிஸ்சார்ஜ் செய்து தன் வீட்டுக்கு கூட்டிப்போனார். பெண் குழந்தை பிறந்து விட்டது என ஒதுக்குவது நியாயமா? என சோனாலி குடும்பத்தினர் சண்டை போட்டதும் மீண்டும் மனைவியை சேர்த்துக் கொண்டார், சந்தீப். ஆனால், தினம் தினம் சித்ரவதைதான். எல்லாவற்றையும் குழந்தைக்காக பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார் சோனாலி. நாட்கள் வேகமாக ஓடின. இந்நிலையில் நேற்று உங்க பொண்ணுக்கு உடல்நிலை திடீரென சரியில்லாமல் போய்விட்டது; உடனே வாருங்கள் என சோனாலி அப்பாவுக்கு சந்தீப் போன் செய்தார்.