/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய பிரதேசத்தில் பக்தர்களுக்கு சோக நிகழ்வு | MP Lorry Accident | Investigation
மத்திய பிரதேசத்தில் பக்தர்களுக்கு சோக நிகழ்வு | MP Lorry Accident | Investigation
நவராத்திரி பண்டிகையையொட்டி மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோயில் அருகே நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் வேகமாக வந்த லாரி ஒன்று பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. கூடி இருந்தவர்கள் லாரி வருவதை பார்த்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பக்தர்கள் பலர் மீது மோதி தடுப்பு சுவரை இடித்து நின்றது. இதில் 14 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருந்தது;
அக் 18, 2026