இந்தியாவின் முதல் உள்நாட்டு குரங்கு அம்மை பரிசோதனை கிட் | Mpox RT--PCR | Indias first indigenous kit
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பிரதேஷ் மெட்டெக் பொருளாதார மண்டலமான( Andhra Pradesh Medtech Zone) AMTZ , டிரான்சிஸியா டயக்னாஸ்டிக்ஸ்(Transasia Diagnostics) இணைந்து குரங்கு அம்மை தொற்றை கண்டறியும் RT-PCR பரிசோதனை தொகுப்பை உருவாக்கி உள்ளனர். இதை இந்திய மருத்துவ கவுன்சிலான ஐசிஎம்ஆர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO வால் சரிபார்த்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் உள்நாட்டு குரங்கு அம்மை பரிசோதனை கிட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்தார். இதை கண்டுபிடித்த 2 நிறுவனத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாக கூறி உள்ளார்.