தோனி தலைமையை அறிவித்த சென்னை அணி பயிற்சியாளர் | ms dhoni | csk captain | ruturaj injured | ipl 2025
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18வது சீசன் மார்ச் 22 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் போட்டியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து விளையாடிய 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே மீது விரக்தியில் இருக்கும் ரசிகர்கள், இப்போது ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பேட்டிங்க் மட்டுமின்றி பவுலிங்க், பீல்டிங் என எல்லாவற்றிலும் சொதப்பிய நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அசாம் பார்சபரா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடினார். இந்நிலையில் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகி உள்ளார்.