/ தினமலர் டிவி
/ பொது
/ வீடியோ எடுத்தா பயந்துடுவோமா: இளைஞர்கள் மிரட்டல் | MTC bus | Womens free pass | Youth making proble
வீடியோ எடுத்தா பயந்துடுவோமா: இளைஞர்கள் மிரட்டல் | MTC bus | Womens free pass | Youth making proble
சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் 26ம் நம்பர் டவுன் பஸ் வடபழனி அவிச்சி பள்ளி பஸ் ஸ்டாப் வந்தபோது, 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறினர். ஏற்கனவே சீட்டில் அமர்ந்து இருந்த வயதானவர்கள், பெண்களை எழுந்திரிக்க சொல்லி ரகளை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை கேள்வி கேட்ட பெண்களை பார்த்து ஓசி டிக்கெட்டில் தானே வரீங்க; நாங்க துட்டு குடுத்து வரோம் என்று அடாவடியாக பேசி சீட்டில் அமர்ந்துள்ளனர். இதனால் பஸ்சுக்குள் நடப்பதை ஒரு பெண் பயணி வீடியோவாக பதிவு செய்தார். அதை பார்த்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டியபடியே மிரட்டும் தொணியில் வாக்குவாதம் செய்தனர்.
பிப் 10, 2025