உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூனுஸ் செய்த பகீர்-வங்கதேச மேப்பில் இந்தியா muhammad yunus india map issue| ind vs pak isi vs raw

யூனுஸ் செய்த பகீர்-வங்கதேச மேப்பில் இந்தியா muhammad yunus india map issue| ind vs pak isi vs raw

வங்கதேசத்தில் வெடித்த உள் நாட்டு கலவரத்துக்கு பிறகு பிரதமராக இருந்த சேக் ஹசீனா அடைக்கலம் கேட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்து விட்டார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். அவர் தான் வங்கதேசத்தை இப்போது வழிநடத்தி வருகிறார். சேக் ஹசீனா இருந்தவரை இந்தியா, வங்கதேசம் உறவு வலிமையாக இருந்தது. ஆனால் யூனுஸ் வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. எந்த பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை செய்து விடுதலை பெற்றதோ அதை பாகிஸ்தானுடன் ஒட்டி உறவாட ஆரம்பித்தது. எல்லையிலும் சரி, வெளியுறவு கொள்கைகளிலும் சரி தொடர்ச்சியாக இந்தியாவுடன் பகையை வளர்த்து வரும் யூனுஸ், வங்கதேசத்தை பாகிஸ்தானின் பகடை காயாகவே மாற்றி விட்டார். சில வாரங்களாக மீண்டும் இந்தியா, வங்கதேசம் உறவு மேம்பட்டு வருவதாக கருதிய நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி இருக்கிறது. வங்கதேசம் அப்படி என்ன செய்தது என்பதை பார்க்கலாம். இடைக்கால தலைவராக பதவி ஏற்றதில் இருந்து அடிக்கடி பாகிஸ்தான் தலைவர்களை சந்திப்பது அவரது வழக்கமாகி விட்டது. குறிப்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ராணுவத்துடன் தீவிர இணக்கம் காட்டி வருகிறார்.

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை