வங்கதேசத்தில் இறங்கி அடிக்கும் இந்தியா muhammad yunus vs waker uz zaman | isi vs raw | ind vs bang
இந்தியாவுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்ட வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசுக்கு எதிராக, இப்போது அந்த நாட்டின் ராணுவமே மிகப்பெரிய ஸ்கெட்ச் போட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த சில நாட்களில் வங்கதேசத்தில் நடக்கப்போகும் மாற்றம் உலகத்தையே அதிர வைக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் இப்போது பேசி வருகின்றனர். மொத்த விவகாரமும் இந்தியாவை மையப்புள்ளியாக வைத்து நகர்வது தான் பரபரப்புக்கு முக்கிய காரணம். வங்கதேசத்தில் அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வங்கதேசத்தில் உள் நாட்டு கலவரம் வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடைக்கலம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். புதிய அரசு அமையும் வரை நாட்டை நிர்வகிக்கும் இடைக்கால தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். முகமது யூனுஸ் பதவி ஏற்றது முதல் வங்கதேச அரசு நிர்வாகம் தறிகெட்டு ஓடுகிறது. வங்கதேசத்தில் அமைதி இல்லை. இந்துக்களும் இதர சிறுபான்மை மக்களும் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். இந்து கோயில்கள் மீதும், இந்து மத தலைவர்கள் மீதும் உள்ளூர் கலவரக்காரர்கள் கைவைப்பதும் தொடர் கதையானது. சேக் ஹசீனா பிரதமராக இருந்தவரை பாகிஸ்தானுக்கு இடம் கொடுக்கவில்லை. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளையும் ஓட ஓட அடித்தார்.