உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூபர் முக்தாருக்கு அடுத்த அடி Mukhtar Ahmed Case | Trichy Surya Siva | Alisha Abdullah

யூடியூபர் முக்தாருக்கு அடுத்த அடி Mukhtar Ahmed Case | Trichy Surya Siva | Alisha Abdullah

ென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜ நிர்வாகி அலிசா அப்துல்லா குறித்து அவதூறாகவும், அவரது இரட்டை குழந்தைகளை இழிவுப்படுத்தியும் திருச்சி சூர்யா என்பவருடன் சேர்ந்து முக்தார் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலிசா அப்துல்லா, சென்னை சோசியல் மீடியா கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார், 33 வயதான திருச்சி சூர்யாவை முதலில் கைது செய்தனர். பின்னர், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பதுங்கி இருந்த முக்தாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரை எக்மோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஜூன் 24 வரை முக்தாரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தியதாக முக்தார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் அவருக்கு எதிராக இப்போது புகார்கள் குவிகின்றன. முக்தார் கைதுக்கு பிறகு முட்டும் 20 பெண்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். முக்தார் தங்களையும் ஆபாசமாக பேசி இழிவு செய்ததாக புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக முக்தார் வெளியிட்ட வீடியோக்களையும் அவர்கள் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளனர் #MukhtarAhmedCase #TrichySuryaSiva #AlishaAbdullah #JusticeForMukhtar #LegalUpdate #TrueCrime #Investigation #CrimeNews #CaseAnalysis #SouthIndia #SuryaSiva #Alisha #CriminalJustice #LegalDrama #SocialJustice #TrendingNow #JusticeMatters #TrueStory #CourtCase

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை