உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு; முக்கொம்பு அணை திறப்பு

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு; முக்கொம்பு அணை திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. கர்நாடக அணைகள் திறக்கப்பட்டதால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்து, சேலம் மேட்டூர் அணை கிடுகிடுவென நிரம்பியது. காவிரி டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 24,700 கனஅடிநீரும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 21,600 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் பொங்கி ஓடுவதால், மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ