உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளாவை கண்டித்து 22ம் தேதி உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் முடிவு! Mullaiperiyar Dam | Devikulam

கேரளாவை கண்டித்து 22ம் தேதி உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் முடிவு! Mullaiperiyar Dam | Devikulam

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ளது. அணை பலவீனமாக இருப்பதாக கூறி, அதை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டுமென கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் வரை சென்று, அணையின் உறுதி தன்மையை நிரூபித்தது. இருப்பினும் அணை விவகாரத்தில் கேரளா சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த முன்வருவதில்லை. தமிழகத்துக்கும் பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இது தொடர்பாக தேனி மாவட்ட கம்பம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா இடையூறு தரக்கூடாது. அப்படி தந்தால் மாநில பிரிவினையின் போது கேரளாவுக்கு தரப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !