/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 30 வயது பெண்: கணவன் முன் சம்பவம் | Mullaperiyar River | Theni
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 30 வயது பெண்: கணவன் முன் சம்பவம் | Mullaperiyar River | Theni
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் முல்லைப் பெரியாறு ஓடுகிறது. சமீபத்திய மழை காரணமாக முல்லை பெரியாறில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனாலும் மக்கள் பொருட்படுத்தாமல் ஆற்றில் ஆபத்தான முறையில் குளிக்கின்றனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் 30 வயதுநிரம்பிய ஒரு பெண்ணும், அவர் கணவனும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது. இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஜூன் 08, 2025