மோதிக்கொண்ட விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? | Mumbai Airport Incident
மும்பையில் இருந்து கோவைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில், ஓடுதளத்தில் இருந்தது. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பை வந்திறங்கிய இண்டிகோ விமானம், பயணிகளை இறக்கிவிடுவதற்காக முனையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களின் இறக்கை நுனிகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன. இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகளிலும் லேசான பாதிப்புகள் ஏற்பட்டன. சம்பவத்தின் போது இரண்டு விமானங்களிலும் பயணிகள் இருந்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பை DGCA அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.