/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க கோர்ட்டில் நடந்த காரசார விவாதம் என்ன? Mumbai terror attack | Tahawwur Rana | America
அமெரிக்க கோர்ட்டில் நடந்த காரசார விவாதம் என்ன? Mumbai terror attack | Tahawwur Rana | America
2008 நவம்பர் 26ம் தேதி யாராலும் எளிதில் மறக்ககூடிய நாள் இல்லை அது. அன்று இரவு கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். கண்டவர்கள் எல்லோரையும் குருவி சுடுவது போல் சுட்டனர். சினிமாவை மிஞ்சிய கொடூரம் அரகேங்கேறிய நாள். உலகயே அதிர வைத்தது. பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் வரை காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டான்.
ஆக 17, 2024