வயநாடு நிலச்சரிவில் ஒரு ஊரே மாயம்? | Mundakkai Town | Wayanad
கேரளாவின் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை கோர தாண்டவம் ஆடுகிறது. மலைப்பகுதிகளில் காட்டாறுகள் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே வயநாட்டில் சிறு சிறு நில சரிவுகள் ஏற்பட்டு மக்கள் பீதியில் இருந்தனர். இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு வயநாடு மலை கிராமத்தை காவு வாங்கிவிட்டது. மேப்பாடி, முண்டக்காய் டவுன், சூரல் மாலா ஆகிய பகுதிகள் அடையாளமே தெரியாத அளவு சிதைந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்து 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 1000த்தை தாண்டும் என பகீர் கிளப்புகின்றனர் உள்ளூர் மக்கள்.
ஜூலை 30, 2024