ஈ.வெ.ரா சிலை முன் தீக்குளித்த முருக பக்தர்; பரபரப்பு Muruga Devotee Commits Suicide | Madurai
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் பூர்ண சந்திரன், வயது 40. MBA பட்டதாரி. மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். நேரம் கிடைக்கும் போது வேனில் சென்று பழங்கள் விற்பனை செய்து வந்தார். திருமணமான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பூர்ண சந்திரன் தீவிர முருக பக்தர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. எனினும் திமுக அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த பூர்ண சந்திரன் தனது உயிரை தந்தாவது குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என எண்ணினார். அதற்காக மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள ஈ.வெ.ரா சிலை முன் இன்று மதியம் 3.30 மணிக்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். சிலை அருகே உள்ள போலீஸ் பூத்துக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். போலீஸ் பூத்துக்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த பூர்ண சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதைனைக்காக போலீசார் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.