ஐடி வேலைன்னு நம்பி சென்றவர்களுக்கு கொடுமை | Myanmar | Cyber fraud
வெளிநாட்டில் ஐடி வேலை, கை நிறைய சம்பளம் என கூறி படித்த இளைஞர்கள் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கிராபிக் டிசைனிங், ஐடி வேலை என்கிற கனவோடு செல்பவர்களுக்கு அங்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் போலி ஐடி உருவாக்கி பலரை ஏமாற்றி பணத்தை சுருட்ட வேண்டும். இதுதான் வேலை. தமிழகத்தில் இருந்து இந்த நாடுகளுக்கு இதேபோன்று வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்டவர்கள் 83 பேரை மீட்டிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் மோசடி நிறுவனத்தில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
நவ 18, 2024