உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவரைப்பேட்டையில் உயிர்களை காப்பாற்றிய 2 அதிர்ஷ்டம் | Mysuru-Darbhanga Train Accident | Kavaraipettai

கவரைப்பேட்டையில் உயிர்களை காப்பாற்றிய 2 அதிர்ஷ்டம் | Mysuru-Darbhanga Train Accident | Kavaraipettai

மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் நடந்த பயங்கர ரயில் விபத்து. சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கிடந்த கோர காட்சியை பார்க்கும் போது நெஞ்சமே பதைபதைத்து விட்டது. கடந்த ஆண்டு உலகையே அதிர வைத்த ஒடிசாவின் பாலாசூர் பகுதியில் நடந்த அதிபயங்கர ரயில் விபத்து காட்சியை தான் கவரப்பேட்டை விபத்து காட்சி நினைவுப்படுத்தியது. விபத்து காட்சிகள் மட்டும் அல்ல; விபத்து நடந்த விதமும் பல விஷயங்களில் அப்படியே ஒத்துப்போகின்றன. பாலாசூரில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதே மாதிரி தான் கவரப்பேட்டையிலும் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மைசூரு-தர்பங்கா செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி இருக்கிறது. மெயின் லைனில் சிக்னல் கிடைத்தும் லூப் லைனில் பாய்ந்தது கோரமண்டல் எக்ஸ்பிரஸ். அதே விஷயம் டிட்டோவாக கவரைப்பேட்டையிலும் நடந்தது. மெயின் லைனில் செல்ல பாக்மதி எக்ஸ்பிரசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்து. ஆனால் அந்த ரயில் லூப் லைனில் சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. ஒரு பெட்டி தீப்பிடித்தது; 13 பெட்டிகள் தடம் புரண்டன. ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் நடக்கவில்லை. பாலாசூரில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா ரயில் வந்தது. தடம் புரண்ட பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இது போன்ற ஒரு விபரீதத்தை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் பாலாசூர், கவரைப்பேட்டை ரயில் விபத்துகள் ஒத்துப்போகின்றன. பாலாசூரில் விபத்தில் 296 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர். 1200 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த இழப்பு தான் உலகத்தையே அதிர வைத்தது. பைடன் உட்பட பல உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை